பொங்கல் சிறப்பு தொகுப்பை விற்க அரசின் புதிய முயற்சி!! மக்களை ஈர்க்க என்னவெல்லாம் பண்றாங்க!!

Photo of author

By Gayathri

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி கோதுமை பாமாயில் சர்க்கரை பருப்பு என அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தை வழங்க இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புகளை வாங்குவதற்கு மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த தொகுப்பானது அப்படியே தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தீர்க்கும் வண்ணம் தமிழக அரசனது ரேஷன் கடைகளுக்கு சில முக்கிய விஷயங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பிரித்த தனித்தனி பொருட்களாக ரேஷன் அட்டைதாரர்களிடம் விற்க வேண்டும் என்றும் அதற்கான பணத்தை முன்கூட்டியே ரேஷன் கடை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் உடைய இந்த முடிவானது ரேஷன் கடை ஊழியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.