பல நாள் கனவு.. பழைய ஓய்வூதிய திட்டம்!! நேற்று இரவு நடந்தது என்ன!!

Photo of author

By Gayathri

தமிழ்நாட்டில் அரசு துறையில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையாக இந்த பழைய ஓய்வூதிய திட்டம் இருந்து வருகிறது. இதனை 2003ஆம் ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் தற்பொழுது வேண்டும் என்றும் அதன் பின் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய பின் தற்பொழுது வரையில் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் உள்ளது என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு :-

ஏப்ரல் 1 2003 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், அதே ஆண்டு மத்திய அரசானது தேசிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால் மாநில அரசினுடைய பங்களிப்பு ஓய் ஊதிய திட்டமே தற்போது வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசன் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த மாதம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தற்பொழுது 3 ஓய்வூதிய திட்டங்கள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் இவை குறித்து தமிழக அரசு முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் இது மூன்றையும் ஒருசேர ஆராய்ந்து சிறப்பு முடிவு ஒன்றினை எடுப்பதற்கு குழு ஒன்றினை அமைத்து இருப்பதாகவும் இந்தக் குழுவில் 3 பேர் பணியாற்றுவதாகவும் இவர்கள் மூன்று பேரும் இணைந்து இந்த மூன்று பணியாற்றுவதாகவும் இவர்கள் மூன்று பேரும் இணைந்து இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்களில் ஊழியர்களின் உடைய கோரிக்கைகளை மனதில் வைத்து ஆராய்ந்து ஒரு முடிவினை அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.