இனி FD யில் அதிக வட்டி!! கொட்டப் போகும் பணமழை!!

Photo of author

By Gayathri

இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய பணவியல் கொள்கை கூட்டமானது வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது.

இந்த பணவியல் கொள்கை கூட்டமானது நடைபெறும் பொழுது ரெப்கோ விகிதம் குறைக்கப்படும் என்றும் அதனால் அதற்கு முன்னதாகவே பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத்தொகை வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. அதிலும் முக்கியமாக union Bank of India, Punjab National Bank, Axis Bank, Shivalik small finance Bank, Karnataka bank மற்றும் federal Bank போன்ற வங்கிகளில் முதலில் FD க்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வங்கிகளும் அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதமும் :-

✓ பஞ்சாப் நேஷனல் பேங்க் – 7% வட்டியை 303 நாட்களுக்கு வழங்குகிறது. 6.7% வட்டியை 506 நாட்களுக்கு வழங்குகிறது.

✓ கொள்கிறேன் பஞ்சாப் நேஷனல் பேங்க் – 3.50% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்குகிறது. மேலும் 7.25% வட்டியை 400 நாட்களுக்கு வழங்குகிறது.

✓ கர்நாடகா பேங்க் – 3.5% முதல் 7.50% வரையிலான வட்டி விகிதத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்குகிறது. 375 நாட்களுக்கு 7.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

✓ யூனியன் பாங்க் ஆப் இந்தியா – 7.30% பட் விகிதத்தை ஏழு முதல் பத்து நாட்களுக்கு அதிகபட்சமான வட்டி விகிதமாக வழங்கி வருகிறது.

✓ ஆக்சிஸ் பேங்க் – 3 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்புத் தொகையை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வைத்திருக்கக் கூடியவர்களுக்கு 3% முதல் 7.2% வட்டி விகிதம் வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.

✓ பெட்ரல் பேங்க் – 3% முதல் 7.5% வரையிலான பட்டு விகிதத்தை 7 நாட்கள் முதல் ஐந்தாண்டுகள் வரை அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு வழங்குவதாகவும் மூத்த குடி மக்களுக்கு 3.5% முதல் 8% வரை வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளினுடைய இந்த வட்டி விகிதங்கள் ஆனது ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.