உங்களில் சிலருக்கு காரணம் ஏதும் இன்றி திடீரென்று மார்பு பகுதியில் வலி மற்றும் குத்தல் போன்ற உணர்வை அனுபவித்திருப்பீர்கள்.இதற்கான காரணங்கள்,அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாயுத் தொல்லையால் ஏற்படும் மார்பு வலி காரணங்கள்:
*உணவு அல்லது தண்ணீர் பருகும் பொழுது அதிக காற்றை விழுங்குதல்
*உரையாடி கொண்டே உணவு அருந்துதல்
*செரிமானப் பிரச்சனை
*அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல்
*ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்
*மலச்சிக்கல்
*மன அழுத்தம்
வாயுத் தொல்லையால் ஏற்படும் மார்பு வலிக்கான அறிகுறிகள்:
*மார்பு அசௌகரியம்
*மார்பு பகுதியில் அழுத்த உணர்வு
*மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்தல் உணர்வு
*துர்நாற்றத்துடன் ஏப்பம் வருதல்
*உணவு உட்கொண்ட பிறகு அசௌகரிய உணர்வு
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி துண்டு – ஒன்று
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2.அடுத்து நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.பிறகு மிக்சர் ஜாரை எடுத்து தோல் நீக்கிய இஞ்சி மற்றும் வெள்ளை பூண்டு பற்களை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.பின்னர் இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
5.ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சுண்டி முக்கால் கிளாஸாக வரும் வரும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
6.இந்த பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி பருகி வந்தால் வாயுத் தொல்லையால் ஏற்பட்ட மார்பு வலி குணமாகும்.