ஏடிஎம் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா!! மறைமுகமாக யூபிஐ ஆப்ஸ்கள் மார்க்கெட்டிங்!!

Photo of author

By Gayathri

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மேல் எடுத்தால் அதன் கட்டணம் 21 ஆக தற்சமயம் இருந்து வருகின்றது. தற்சமயம் வரை இந்தியாவில் அக்கவுண்டுக்கு சொந்தமான வங்கிc ஏடிஎம் மூலம் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அக்கவுண்டுக்கு சொந்தமில்லாத மற்ற வங்கிகளில் வருடத்திற்கு மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் ஒருமுறை பணம் எடுக்க தலா ரூபாய் 21 வங்கி பிடித்துக் கொள்ளும் என்ற நடைமுறை உள்ளது.

இதனை தற்சமயம் என் பி சி ஐ (National payment Corporation of India) ரூபாய் 22 ஆக உயர்த்தும்படி பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே சொந்த காசை எடுக்கும் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா? என்று மக்கள் புலம்பி வரும் நிலையில் இதற்கு மேற்கொண்டு கட்டணம் வசூலிக்க பரிந்துரைப்பது நியாயமா! மறைமுகமாக யூபிஐ ஆப்களை இவர்கள் மார்க்கெட்டிங் செய்கிறார்களா? என்ற பல கேள்விகள் மக்களின் மத்தியில் இருக்க அதற்கே இன்னும் விடை காணாத நிலையில் தற்சமயம் கட்டண விலை உயர்த்துவது மக்களை மேற்கொண்டு அவதிக்குள்ளாக்குகிறது. இதனைப் பற்றி விசாரித்து வருகிறது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கி மக்கள் அவதிகளை புரிந்து நல்ல முடிவைத்தரும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.