அமெரிக்காவில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்த 2 மாநிலத்தவர்கள் தான்!!

Photo of author

By Gayathri

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை அவர்களுடைய நாட்டிற்கு நாடு கடத்த இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அவர்கள் வெளியிட்ட தகவலின் படி, நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் 100 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டனர்.

18000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது 100 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் ஆனது நாடு கடத்தி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் கொண்டு வந்து விட்டு இருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை வரவேற்க பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விவகாரங்கள் துறை அமைச்சர் குல்திவால் வந்திருந்ததாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

நேற்று நாடகத்தப்பட்ட 100 இந்தியர்கள் பெரும்பான்மையானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்றும் இவர்களில் குஜராத் மாநிலத்தவர்களை அவர்களுடைய அடையாள அட்டைகளை ஆய்வு செய்து அதன் பின் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களுடைய வேலைகளுக்காக முறையாக விசா எடுத்து அமெரிக்காவிற்கு சென்று பணிபுரிந்தவர்கள் என்றும் தங்களுடைய விசா காலம் முடிந்த பின்பும் முறைகேடான முறையில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்த காரணத்தால் அவர்களை நாடு கடத்தி இருப்பதும் தெளிவாகியுள்ளது.

அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பவர்களை சந்தித்து முறைகேடான முறையில் குடியேறி இருப்பவர்கள் குறித்த விவாதிக்க இருப்பதாகவும் அதற்கு முன்னதாக ட்ரம்பவர்களுக்கு தொலைபேசி மூலமாக நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.