இனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு!! மின்சாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

மின்சார வாரியத்திடமிருந்து மின்மோட்டோர்களை வாங்குவதற்கு நுகர்வோர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தற்பொழுது மின் நுகர்வோர்கள் புதிய மீட்டர் பாக்ஸ்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுடைய பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அங்கீகரித்த மீட்டர் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற பிறகு, அதனை பொருத்துவதற்கு மின்சார அலுவலகத்தில் கேட்டு முறைப்படி பொருத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மின் இணைப்புகளில் ஏற்பட்டு வரும் தாமதங்களை தளர்த்தி 3 நாட்களுக்குள் தாழ்வான பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பானது கொடுக்கப்படும் வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

குறிப்பாக, புதிய மின் இணைப்புகள் கொடுக்கப்படும் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்த வேண்டிய தேவை இல்லை என்றால் அந்த இடங்களில் 3 தினங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் டிரான்ஸ்பார்மர்கள் பொருத்த வேண்டும் என்றால் அந்த இடத்திற்கு 7 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.