திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரிட்டிஷ் ஆட்சி கால சான்று!! தீர்ப்பு மலை பக்கம்!!

Photo of author

By Gayathri

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுல் முதன்மை வாய்ந்ததாக திருப்பரங்குன்றம் வழி வழியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்போது அங்கு முஸ்லிம் இந்து பிரச்சனை பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. இதே போல் முன்பொரு காலத்திலும் அங்கு பிரச்சனை நிகழ்ந்துள்ளது. இதனால் மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு கோரப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றம் இதனை விசாரித்து இம்மலை பல காலம் முன்பே அதாவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு முன்பே சுவாமி மலை என்றும், தேர் வரும் விதி கிரி வீதி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

மேலும் இதனை நாம் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறுவதற்கு சான்று உண்டு. அம்மலையை சுற்றியுள்ள இடங்களை அக்கோயில் தேவஸ்தானம் தான் பராமரித்து வந்துள்ளது என்று பல காரணங்களை கூறி மதுரை கீழமே நீதிமன்றம் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை எதிர்த்த முஸ்லிம் அமைப்பினர் தர்கா இருக்கும் இடமும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று உயர் நீதிமன்றத்தில் மறு வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முஸ்லிம்களின் ஆப்பிலை ரத்து செய்து மலை அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதனை ஏற்றுக்கொள்ளாத இந்து அமைப்பினர் லண்டன் பிரிவி கவுன்சிலில் அப்பில் செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், மன்னர்களால் தீர்ப்பு வழங்க முடியாத வழக்குகளை லண்டன் பிரிவி கவுன்சிலில் சமர்ப்பித்து அதனை அவர்கள் நடுநிலையாக விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள். இந்த லண்டன் பிரிவி கவுன்சிலின் முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்த வழக்கை முறைப்படி விசாரித்த கவுன்சில் மதுரை கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி முடிவு என்று சில காரணங்களை எடுத்துக் கூறியுள்ளது. மலைப்பகுதியில் சுற்றி உள்ள கிரி வீதியில் பல்வேறு சிறுகோயில்கள் உள்ளன. மேலும் பழங்கால மண்டபங்கள் மற்றும் பக்தர்களுக்கான திண்ணைகள் போன்றவும் அங்கு பழமை வாய்ந்ததாக காணப்படுகின்றன. இதனை தொல்லியல் நிபுணர்களும் புலன் செய்து இதனை நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவும் கோயில் நிர்வாகம் பராமரித்து வருகின்றது என்ற ரிப்போர்ட்டை சமப்படுத்தி உள்ளனர்.

இவ்வளக்கு தொடரப்பட்டதே 1920 காலங்களில் அதற்கும் முன்னதாக நூறு ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்ததாக இந்து அமைப்பினருக்கு சொந்தம் என்று லண்டன் பிரிவி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் மலை சுற்று பாதையை அகலப்படுத்துவதற்காக அங்குள்ள வீட்டை கோவில் நிர்வாகம் உரிய பத்திரத்தோடு, பணம் அளித்து வாங்கி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அதற்கு முன்னர் பல இடங்களில் கோவில் நிர்வாகம் தலையிட்டு மலை சார்பாக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பதற்கும் சான்று உள்ளது. எனவே மதுரை கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானது என்று வெளியிட்டுள்ளது லண்டன் பிரிவி கவுன்சில். புறம்போக்கு நிலம் என்றாலே அது அப்போது பிரிட்டிஷ் காரர்களுக்கு சொந்தமானது. ஆனால், மலையை சுற்றி உள்ள புறம்போக்கு இடங்களை அவர்களே கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறியுள்ள சான்று உண்டு என்று அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.