தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.1.20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடனுடைய வட்டி மற்றும் கால அளவை விவரமாக காண்போம்.
கடன் பெற தகுதியுடையவர்கள் :-
✓ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் இருத்தல் வேண்டும்.
✓ வயதுவரம்பு 18 முதல் 60 வயதாக இருத்தல் வேண்டும்.
✓ மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினராக இருக்க வேண்டும்.
✓ குடும்பத்தில் ஒருவர் மட்டுமே திட்டத்தின் கீழ் பயன்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற நினைப்பவர்களுக்கு 2 மாடுகளை வாங்குவதற்கு கடன் வழங்கப்படும் என்றும் ஒரு மாட்டிற்கு 60,000 ரூபாய் என 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் இதற்கான வட்டி விகிதம் 7 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
✓ ஜாதி சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ் மற்றும் பிறப்பிட சான்றிதழ் இவற்றுடன் வங்கிகள் கேட்கக்கூடிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இவற்றை விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வங்கிகளுக்கு சென்ற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று பால் உற்பத்தியாளராக தங்களுடைய சுய தொழிலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.