உடலை திடமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளோடு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.பழங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.குறிப்பாக நரம்பு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்திக் கொள்ள திராட்சை மற்றும் சீத்தா பழ சாறு உட்கொள்ளலாம்.
சீத்தா பழ ஊட்டச்சத்துக்கள்:
வைட்டமின் பி,கால்சியம்,தாதுக்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தின் விதைகள் மற்றும் சீத்தா இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
திராட்சை பழ ஊட்டச்சத்துக்கள்:
வைட்டமின் சி,தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது .திராட்சை பழ விதை கேன்சர் செல்களை அழிக்கும் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நரம்பு பலவீனம் அடைய காரணங்கள்:
1)நோய் தொற்று
2)நரம்பில் அடிபடுதல்
3)கணைய புற்றுநோய்
4)மூட்டு வலி
5)மோசமான உணவுப் பழக்கம்
6)வைட்டமின் பி குறைபாடு
7)தைராய்டு குறைபாடு
நரம்பு பலவீனமாதலின் அறிகுறிகள்:
1)உடலில் எரிச்சல் உணர்வு
2)குத்தல் வலி
3)அசாதாரண உணர்வு
4)தூக்கம் இழப்பு
நரம்பின் பலத்தை அதிகரிக்கும் பானம் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)சீத்தா பழம் – ஒன்று
2)கருப்பு திராட்சை – கால் கப்
செய்முறை விளக்கம்:-
**முதலில் நன்றாக கனிந்த சீத்தா பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் சதை பற்றை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு சேகரித்துக் கொள்ள வேண்டும்.
**அதற்கு அடுத்து கால் கப் அளவிற்கு கருப்பு திராட்சை பழத்தை எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
**பின்னர் மிக்சர் ஜாரில் இந்த இரண்டு பழத்தையும் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.பிறகு தங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை அதில் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடல் நரம்புகள் வலிமைபெறும்.
**நரம்பு பலவீனம்,நரம்பு வீக்கம்,நரம்பு சுருட்டல் மற்றும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பானத்தை பருகி வர நல்ல மாற்றம் ஏற்படும்.