இந்த காலத்தில் பெண்கள் பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்வது அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி உண்டதால் பிரச்சனையை இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
பிறப்புறுப்பு வறட்சிக்கான காரணங்கள்:
**மன அழுத்தம்
**உணவுப் பழக்கம்
**மருந்து மாத்திரையின் விளைவு
**தாய்ப்பால்
**குறைவான ஈஸ்டிரோஜன் சுரத்தல்
பிறப்புறுப்பு வறட்சி அறிகுறிகள்:
**அடிக்கடி சிறுநீர் கழித்தல்
**உடலில் நீர் பற்றாக்குறை
**சிறுநீர் பாதை நோய் தொற்று
**உடலுறவிற்கு பிறகு அரிப்பு,எரிச்சல் உணர்வு
தேவையான பொருட்கள்:-
வேப்பிலை – ஒரு கைப்பிடி
தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீரை அதில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த வேப்பிலை பானத்தை நன்றாக ஆறவைத்து பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்து வந்தால் பிறப்புறுப்பு பகுதியில் இயற்கையான முறையில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
நெல்லிக்காய் – இரண்டு
தண்ணீர் – அரை கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த நெல்லிக்காய் விழுதை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த பானம் ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு காட்டன் பஞ்சை அதில் போட்டு நினைத்து பிறப்புறுப்பு பகுதியில் வைத்து அப்ளை செய்ய வேண்டும்.இப்படி செய்வதால் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
சீமை சாமந்தி பூ – ஒன்று
தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு சீமை சாமந்தி பூவின் இதழ்களை போட்டு நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த நீரை ஆறவைத்து பில்டர் செய்து பிறப்புறுப்பு பகுதியை க்ளீன் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் பிறப்புறுப்பு வறட்சி நீங்கி ஈரப்பதம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
கற்றாழை துண்டு – ஒன்று
பயன்படுத்தும் முறை:-
ஒரு பிரஸான கற்றாழை துண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை மட்டும் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ள வேண்டும்.
அதன் பிறகு தண்ணீர் ஊற்றி இரண்டு,மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை அரைத்து பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி ஈரப்பதம் அதிகரிக்கும்.