மாதவிடாய் கால வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த ஹோம் ரெமிடி உங்களுக்காக!!

Photo of author

By Divya

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலியை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள்.

1)இஞ்சி பீஸ் – சிறிதளவு
2)தேன் – ஒரு ஸ்பூன்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு கத்தி கொண்டு இஞ்சி தோலை நீக்கிவிடுங்கள்.

அடுத்து இதை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு இடித்து வைத்துள்ள இஞ்சியை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.மிதமான தீயில் கொதிக்க வைத்தால் தான் இஞ்சி சாறு முழுமையாக தண்ணீரில் இறங்கும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.

1)பால் – ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்த பிறகு கால் தேக்கரண்டி சமையல் மஞ்சள் தூளை போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் மாதவிடாய் வயிற்று வலி முழுமையாக குணமாகும்.

1)பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன்
2)தேன் – ஒரு ஸ்பூன்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் பெருஞ்சீரகம் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடித்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் மாதவிடாய் வயிற்று வலிக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

இது தவிர மேலும் சில குறிப்புகள் மூலம் மாதவிடாய் கால வலியை குறைக்கலாம்.சூடான தண்ணீர் கொண்டு வயிற்று பகுதியில் ஒத்தடம் கொடுத்தல்,வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்தல் போன்றவற்றின் மூலம் மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கலாம்.

அதேபோல் வெந்தயத் தேநீர் செய்து பருகுவதன் மூலம் மாதவிடாய் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.