இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது.
அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்காதது, மேலும் சக மனிதர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது ஆகிய செயல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க முற்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி கூறிய அணுகுமுறைகளை தவறாக பயன்படுத்துவது, KYC மற்றும் AML ஆவணங்களை போலியாக சமர்ப்பிப்பது ஆகியவை பெரும் குற்றங்களாக கருதப்படுகிறது. மேற்கண்ட இந்த செயல்களில் ஈடுபட்டால் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் இல்லையெனில் ஏமாற்றிய தொகைக்கு ஈடாக இரு மடங்கு தொகை ரிட்டர்ன் கொடுக்க வேண்டும் என்று வெளியிட்டுள்ளது. இவற்றுள் எந்த அபராதம் விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியே முடிவு செய்யும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய நாளில் சொன்ன டேட்டில் தண்டனை பணம் கட்டாவிட்டால் அடுத்த நாளுக்கு எஸ்டாவாக ரூபாய் 25 ஆயிரம் சேர்த்து கட்ட வேண்டும். முதலில் ரிசர்வ் வங்கியிடம் குற்றவாளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். மிகப்பெரிய குற்றமெனில், விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.