சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் கேட்க காதே மூடிக்கொள்ளும் வகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த வருட ஆரம்பத்தில் பாலியல் குற்றங்களுக்கான திருத்த சட்டம் அமல் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தற்சமயம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரின் படிப்பு தகுதி நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டிருந்தால், தவறு செய்தவர் யாராயினும் அவர்களுடைய கல்வி சான்றானது ரத்து செய்யப்படும். மேலும், மாணவிகள் புகார் அளிப்பதற்காக புது நடைமுறை கொண்டுவரப்படும். குற்றங்களில் ஈடுபட்டவருக்கு தண்டனை மிகக் கடுமையாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட சில மக்களின் கூற்று பின்வருமாறு, இதற்கு இவருக்கு உரிமை உள்ளதா? என்றபடி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் இதை விட கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேலும் சிலர் இது வரவேற்கப்பட்ட ஒன்று. எனினும், இதில் குற்றம் புரியாதவர்கள் கூட மாட்ட வாய்ப்பு உண்டு. எனவே தண்டனையை ஆவணப் படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் திராவிட மாடல் அரசுக்கு திராணி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.