அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :-

கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்து கிடைக்கும் வேலையை செய்து வேறு வழியின்றி கனடாவில் செட்டில் ஆகி விடுவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் சிலரோ கனடாவிற்கு வந்த கனடா வழியாக அமெரிக்காவில் நுழைவதற்காக இதுபோன்ற போலி விசாக்களை தயார் செய்து கனடாவிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் வேலை அல்லது வெளிநாட்டில் படிப்பு என இந்தியாவில் இருந்து புறப்பட்டு செல்லும் பலர் இது போன்ற போலி ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்ட தங்கள் செல்லக்கூடிய நாடுகளில் இருந்து திரும்பி வருவதற்கான வழி தெரியாமல் அங்கேயே ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து விடுகின்றனர். இவ்வாறாகத்தான் கனடாவில் 20000 மாணவர்களின் உடைய தரவுகள் காணாமல் போயிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.