சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ,1.25 லட்சம் ரூபாயில் தொடங்கி ரூ.15 லட்சம் ரூபாய் வரை சிறு தொழில் மற்றும் வியாபாரம் பொறுத்து கடன்கள் வழங்கப்படுவதாகவும் இதற்கான வட்டி விகிதம் 7% முதல் 8% வரை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதிகளாக குறிப்பிடப்பட்டவை :-

✓ மாநில அல்லது மத்திய பட்டியலில் இடம்பெற்று இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினராக இருத்தல் வேண்டும்.

✓ ஆண்டு குடும்ப வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

✓ 18 வயது முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும்.

✓ குடும்பம் ஒன்றிற்கு ஒருவர் மட்டுமே இக்கடனை பெறுவதற்கு தகுதியுடையவர்.

விண்ணப்பிக்கும் முறை :-

சென்னையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைமை அலுவலகம், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க மேலாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றில் இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கும் என்றும் அதனை நிரப்பி அங்கேயே கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :-

✓ ஜாதி சான்றிதழ்
✓ வருமானச் சான்றிதழ்
✓ பிறப்பிடச் சான்றிதழ்
✓ சிறு தொழில் செய்வதற்கான கொட்டேஷன்.
✓ திட்ட அறிக்கை
✓ குடும்ப அட்டை
✓ ஓட்டுனர் உரிமம்
✓ வங்கி கேட்கக்கூடிய அடமான ஆவணங்கள்
✓ ஆதார் அட்டை
✓ செல்போன் நம்பர்