உடல் நரம்புகள் வலிமை இழந்தாலோ அல்லது நரம்பில் அடிபட்டாலோ நரம்பு தளர்ச்சி உண்டாகிறது.பெண்களைவிட ஆண்கள் தான் நரம்பு தளர்ச்சி பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.
ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்,வைட்டமின் பி 12 குறைபாடு போன்ற காரணங்களால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.
நரம்பு தளர்ச்சிக்கான காரணங்கள்:-
*தசை பலவீனம்
*மரத்து போதல்
*தசை பிடிப்பு
*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*மது மற்றும் புகைப்பழக்கம்
*வயது முதுமை
*நரம்பில் அடிபடுதல்
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:
*கை கால் நடுக்கம்
*தலைவலி
*நிலைதடுமாற்றம்
*உடல் சோர்வு மற்றும் களைப்பு
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு திராட்சை விதை – 10 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் பத்து கிராம் கருப்பு திராட்சை விதையை பாத்திரத்தில் போட்டு சிறிது வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து இந்த கருப்பு திராட்சை விதையை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
ஸ்டெப் 04:
பின்னர் அரைத்து வைத்துள்ள திராட்சை விதை பொடியை கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 05:
அடுத்து இந்த பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இந்த பானத்தை ஒரு வாரம் தொடர்ச்சியாக பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)இலவங்கப்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேன் – தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கி மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த ஜாதிக்காய்,இலவங்கப்பட்டை பொடியை போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.