தற்பொழுது பல்வேறு உடல் நல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகின்றோம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான்.நாம் மோசமான உணவுமுறைகளை பின்பற்றுவதால் தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயாளியாக மாறிவருகின்றோம்.
எனவே உடலை திடமாக வைத்துக் கொள்ள கொண்டைக்கடலை,பாதாம் பருப்பு போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கருப்பு கொண்டைக்கடலை சத்துக்கள்:
*சோடியம் *பாஸ்பரஸ் *புரதம் *கால்சியம் *மெக்னீசியம் *வைட்டமின் ஏ *வைட்டமின் சி *இரும்புச்சத்து *பொட்டாசியம்
பாதாம் பருப்பு சத்துக்கள்:
*கால்சியம் *துத்தநாகம் *இரும்பு *நியாசின் *போலேட் *தயாமின் *வைட்டமின் பி *நார்ச்சத்து *புரதம் *தாமிரம் *மெக்னீசியம்
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – நான்கு
2)கருப்பு சுண்டல் – ஒரு தேக்கரண்டி
3)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து நான்கு பாதாம் பருப்பை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
**அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கருப்பு சுண்டல் சேர்த்து தண்ணீர் ஊற்றி எட்டு முதல் பத்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
**இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக ஊறவைத்த பின்னர் கிண்ணம் ஒன்றிற்கு இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
**அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து பத்து நிமிடங்கள் உறவிட வேண்டும்.பிறகு இதை வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி இரத்த உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்த பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.இதயம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்பட இந்த கொண்டைக்கடலை மற்றும் பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம்.
வயிறு உப்பசம்,வாயுக் கோளாறு போன்ற பாதிப்புகள் குணமாக பாதாம் பருப்பு,கொண்டைக்கடலையை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.உடலில் புரதச்சத்து அதிகரிக்க இந்த இரண்டு பொருட்களையும் ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.
சருமம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்துவிடுபட பாதாம் பருப்பு,கொண்டைக்கடலையை ஊறவைத்து சாப்பிடலாம்.