இன்று பெரும்பாலான மக்கள் வாய் துர்நாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.பற்களை துலக்கினாலும் வாயில் இருந்து கெட்ட வாடை வீசுகிறது என்றால் வாய் சுகாதாரமின்மையே இதற்கு காரணம்.
வாயில் பாக்டீரியாக்கள் அதிகளவு உருவாகி இருந்தால் இந்த கெட்ட வாடை உண்டாகும்.இதனால் பிறரிடம் தயக்கத்துடன் பேசும் நிலை உருவாகிவிடும்.நம் வாயில் இருந்து கெட்ட வாடை வீசினால் அதை நம்மிடம் சொல்ல பிறர் தயங்குவார்கள்.நாம் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும் என்று நினைக்கிறோம்.
ஆனால் பற்களை துலக்கினாலும் வாயில் இருந்து கெட்ட வாடை வீசும்.இதை சில செயல்கள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
வாய் துர்நாற்றம் கண்டறிய வழிகள்:
உங்கள் நாவை காயில் வைத்து தேய்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து அவ்விடத்தை முகர்ந்து பாருங்கள்.அதிக வாடை வீசினால் உங்கள் வாய் சுகாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
அதேபோல் ஒரு காலி டம்ளரின் விரிந்த பகுதியை வாயில் வைத்து ஊத வேண்டும்.இப்படி செய்யும் பொழுது உங்களால் வாய் துர்நாற்றத்தை உணர முடியும்.உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் பொழுது வாய் துர்நாற்றம் வீசுகிறதா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்:
பற்களுக்கு இடையே உணவுத் துகள்கள் தேங்கி இருத்தல்.நாவில் அதிக அழுக்குகள் படிதல்.சிதைந்த பற்கள்,ஈறு வீக்கம்,ஈறுகளில் சீல் புண்கள் இருத்தல்,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்காமை போன்றவை வாயில் கெட்ட வாடை வீசுவதற்கான காரணங்கள் ஆகும்.
அதேபோல் வயிற்றில் கழிவுகள் தேங்கி இருத்தல்,மலச்சிக்கல் பிரச்சனை,குடல் அல்சர்,செரிமானப் பிரச்சனை போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் வீசக் கூடும்.
வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வழிகள்:
பல் துலக்கிய பிறகு இடுகுகளில் உள்ள அழுக்கை அகற்ற வேண்டும்.டங்க் க்ளீனர் கொண்டு நாவில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய வேண்டும்.
புதினா,ஏலக்காய் போன்ற வாசனை நிறைந்த பொருட்களை மென்று வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் அகலும்.வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் குடல் கழிவுகள் நீங்கும்.இதனால் வாய் துர்நாற்றம் வீசுவது முழுமையாக கட்டுப்படும்.