அசிடிட்டி பிரச்சனையா? இதை குணப்படுத்த சோம்பு சீரகத்தைவிட பெஸ்ட் மருந்து இல்லை!!

Photo of author

By Divya

மோசமான உணவுப் பழக்கத்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெமிடியை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை கல்வத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பெருகினால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

நெஞ்செரிச்சலுக்கு மற்றொரு தீர்வு இதோ:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி குறைந்தது ஐந்து மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இந்த பானத்தை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

சீரகம்,வெந்தய பானம் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 04:

இந்த பானத்தை அரை மணி நேரத்திற்கு ஆறவைத்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.

சீரக ஊட்டச்சத்துக்கள்:

*சோடியம் *பொட்டாசியம் *புரதம் *கொழுமியம் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *வைட்டமின் ஏ

வெந்தயம் ஊட்டச்சத்துக்கள்:

*புரதம் * பொட்டாசியம் *மெக்னீசியம் *மாங்கனீசு *நார்ச்சத்து *வைட்டமின் சி *இரும்பு

சீரக வெந்தய பானம் நன்மைகள்:

*இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுவிடும்.

*செரிமான பிரச்சனையை சரி உட்கொள்ளும் உணவு சீக்கிரம் செரிக்க சீரக வெந்தய பானத்தை பருகலாம்.

*மூட்டு பகுதியில் வலி வீக்கத்தை உணருபவர்கள் இந்த சீரக வெந்தய பானத்தை தொடர்ந்து பருகி வரலாம்.

*நரம்பு சார்ந்த பாதிப்புகளுக்கு தீர்வாக இந்த சீரக வெந்தய பானம் திகழ்கிறது.தொடர்ந்து இந்த பானத்தை பருகி வந்தால் நரம்பு வீக்கம்,நரம்பு தளர்ச்சி,நரம்பு சுருட்டல் பாதிப்பு குணமடையும்.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தொடர்ந்து இந்த விதைகளை சாப்பிட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

*சீரக வெந்தய பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உடல் வெப்பநிலை சமநிலையாகும்.வாயுத் தொல்லை அகல இந்த இரண்டு பொருட்களை ஊறவைத்து காய்ச்சி டீ போல் பருகி வரலாம்.

*நெஞ்செரிச்சல் பாதிப்பு இருப்பவர்கள் சீரகம் வெந்தயத்தை கொதிக்க வைத்து பருகி வரலாம்.

*இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.