மருத்துவரின் எச்சரிக்கை! அடிக்கடி கால் வீங்கி போகுதா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

Photo of author

By Divya

உங்களுக்கு அடிக்கடி கால் பாத வீக்க பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அஜாக்கிரதையாக இருக்காமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.ஏனென்றால் அடிக்கடி கால் வீக்க பிரச்சனை ஏற்படுவது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

கால்கள் வீங்க காரணம்:

1)வாத நோய்
2)வெரிகோஸ் வெயின்
3)சிறுநீரக நோய்கள்
4)இரத்த சோகை

தொடர்ந்து கால்களை தொங்கவிட்ட படி இருத்தல்,நீண்ட தூரம் நடத்தல் போன்ற காரணங்களால் கால் பாதங்கள் வீங்குவது இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் காரணமின்றி அடிக்கடி கால் பாதங்கள் வீங்குவது சிறுநீரக நோய்க்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தல்,சிறுநீரக தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளால் கால் பாதங்கள் வீங்குகிறது.சிறுநீரக நோய் பாதிப்பால் தான் கால் பாதங்கள் வீங்குகிறது என்பது உறுதியானால் நாம் சில விஷயங்களை பின்பற்றி நோய் பாதிப்பின் தீவிரத்தை அவசியம் குறைக்க வேண்டும்.

உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சிலருக்கு தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருக்கும்.அதேபோல் சிலருக்கு முகத்தில் வீக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.இந்த அறிகுறிகளும் சிறுநீரக பாதிப்பை உணர்த்தக் கூடியவையாக திகழ்கிறது.

கால் பாத பெருவிரலில் வீக்கம் இருந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகத்தில் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்க மூலிகை பானத்தை தொடர்ந்து பருக வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)தசவேதாரி சூரணம் – 10 கிராம்
2)தாதுவிருத்தி சூரணம் – 10 கிராம்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

தசவேதாரி சூரணம் மற்றும் தாதுவிருத்தி சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.ஒவ்வொன்றையும் தலா 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

பிறகு தாதுவிருத்தி சூரணம் மற்றும் தசவேதாரி சூரணத்தில் இருந்து 10 கிராம் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு மாற்றி தினம் இருவேளை பருகி வந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.