நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!

Photo of author

By Divya

நம் மண்ணில் விளைகின்ற மரவள்ளி கிழங்கு,சர்க்கரைவள்ளிக் கிழங்கு,பனங்கிழங்கு போன்றவை ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கிழங்குகள் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இதில் அதிக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கை உட்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இந்த கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது.

மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

*கால்சியம்
*புரதம்
*இரும்புச்சத்து
*வைட்டமின் ஏ,பி2 மற்றும் சி
*பாஸ்பரஸ்

மரவள்ளி கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மறதி பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை உட்கொள்ளலாம்.உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை இந்த மரவள்ளி கிழங்கு சரி செய்கிறது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மரவள்ளி கிழங்கை பொடித்து கஞ்சி செய்து பருகி வரலாம்.

உடல் வலிமை பெற மரவள்ளி கிழங்கு மாவு,பால்,வெல்லம் கஞ்சி செய்து பருகலாம்.எலும்பு தேய்மானப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

மரவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு மற்றும் முழங்கால் வலி குணமாகும்.எலும்பிற்கு கால்சியம் சத்து கிடைக்க மரவள்ளி கிழங்கை வேக வைத்து உட்கொள்ளலாம்.

மரவள்ளி கிழங்கை சாப்பிட கூடாதவர்கள்:

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை சாப்பிடக் கூடாது.சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை சாப்பிடக் கூடாது.

கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை சாப்பிடக் கூடாது.

மூளை பக்கவாத நோய் பாதிப்பதால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கை தவிர்க்க வேண்டும்.வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் வயிற்று வலி உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறது.மரவள்ளி கிழங்கு நல்லது என்றாலும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் தவிர்த்துவிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.