என்ன சாப்பிட்டால் PCOS குணமாகும்? பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று அழைக்கின்றோம்.PCOS பிரச்சனையால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும்.இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருத்தரிக்க சவாலாக இருப்பது இந்த PCOS பிரச்சனை தான்.

PCOS அறிகுறிகள்:

*முறையற்ற மாதவிடாய்
*உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்தல்
*எடை அதிகரிப்பு
*தலைவலி
*முகப்பரு
*நீரழிவு நோய்

PCOS வருவதற்கான காரணங்கள்:

*பெண்களின் கருப்பையில் ஆண்ட்ரோஜன் சுரப்பி அதிகமாக சுரந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படும்,

*பெண்களின் கருப்பையில் ஆண்மை தன்மை கொண்ட சுரப்பி அதிகம் சுரந்தால் PCOS பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

PCOS-ஆல் ஏற்படும் பாதிப்புகள்:

*கருவுறுதலில் தாமதம் ஏற்படுதல்
*கருவுறாமை

PCOS என்று அழைக்கப்படும் இந்த ஹார்மோன் சமநிலை மாற்றத்தை சந்திக்காமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.

PCOS உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

பழுப்பு அரிசி உணவுகள்,முழு தானிய உணவுகள்,ஓட்ஸ் போன்றவற்றை PCOS பிரச்சனை இருப்பவர்கள் உட்கொள்ளலாம்.ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளலாம்.

PCOS பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குறைந்த கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.சிவப்பு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மீன்,முட்டை போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளலாம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.சோடா,இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.PCOS பிரச்சனை இருப்பவர்கள் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்துக் கொள்ளாலாம்.கார்போஹைட்ரேட்க்கள் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.