பிளட்டில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க.. 10 சுண்டைக்காயை இந்த மாதிரி சாப்பிடுங்க!!

நமது இரத்த அணுக்களில் காணப்படும் ஒருவகை புரதம் ஹீமோகுளோபின்.இரத்தத்தில் நிறைந்துள்ள ஆக்சிஜனை உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்லும் பணியை இந்த ஹீமோகுளோபின் செய்கிறது.

இதன் எண்ணிக்கை குறைந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.அதேபோல் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

*உடல் சோர்வு
*உடல் பலவீனம் அடைதல்
*இரத்த சோகை
*தோல் சுருக்கம்
*அடிக்கடி மயக்க உணர்வு

தேவையான பொருட்கள்:-

1)பச்சை சுண்டைக்காய் – 100 கிராம்
2)நெய் – ஒரு தேக்கரண்டி
3)மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி

பயன்படுத்தும் முறைல்:-

ஸ்டெப் 01:

முதலில் பச்சை சுண்டைக்காயை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

நெய் உருகி வந்ததும் உரலில் நசுக்கிய சுண்டைக்காயை அதில் போட்டு குறைவான தீயில் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.சுண்டைக்காய் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு அரைத்த மிளகுத் தூளை வதங்கி கொண்டிருக்கும் சுண்டைக்காயில் போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.அதன் பிறகு சிட்டிகை அளவு தூள் உப்பு சேர்த்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.