ADMK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறிவிட்டது. அந்த வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் வெவ்வேறு முனைகளாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால் பன்னீர்செல்வம் இதனை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் மேல்முறையீட்டு மூலம் விடாது பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வாறு உட்கட்சி பூசல் நிலவரத்தின் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி எடப்பாடியால் கட்சி கொடியை பயன்படுத்த முடியும் என்று அடுத்தடுத்த கேள்விகளை ஓபிஎஸ் முன்வைத்தார். அதேபோல கட்சியின் சட்ட திட்டங்களின் வரைமுறைப்படி கட்சிப் பொறுப்பாளர்களை திடீரென்று மாற்றம் செய்ய இயலாது, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தான் மாற்றம் செய்ய முடியும்.
அப்படி இருக்கும் பொழுது என்னை எப்படி கட்சியில் இருந்து வெளியேற்ற அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார். அதேபோல இரட்டை இலை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். இப்படி இருக்கையில், எடப்பாடியும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதை தாண்டி எந்த ஒரு முடிவுகளையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்க முடியாது தலையிடவும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார். இது குறித்த வழக்கமானது நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்த நிலையில் நான்கு வாரங்களுக்குள் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி இன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தின் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஓபிஎஸ் பக்கம் சாதகமாக அமைந்துள்ளது. கட்சிக்கொடி இவர் பக்கம் வரவும் அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றது.