குடிப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல.. இந்த பொடியை 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 45 நாட்கள் குடிங்க!!

Photo of author

By Divya

இன்று வயதானவர்கள் முதல் இளம் வயதினர் வரை மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இந்த மது பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றது.

தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையானால் குடும்ப உறவில் மனக்கசப்பு ஏற்படும்.குடிப்பழக்கத்தால் குடல் ஆரோக்கியம் முற்றிலும் பாதிப்பை சந்திக்கிறது.எனவே மது பழக்கத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழ சித்த மருத்துவர் சொன்ன இந்த வைத்தியத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு செய்து வாருங்கள்.

மது பழக்கத்திற்கான காரணங்கள்:-

1)மன அழுத்தம்
2)வயது கோளாறு

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)கரிசலாங்கண்ணி – ஒரு கப்
3)கீழாநெல்லி – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

கறிவேப்பிலை,கரிசலாங்கண்ணி,கீழாநெல்லி ஆகியவற்றை மேலே சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றை வெயிலில் போட்டு நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.மொரு மொரு பதம் வரும் வரை தனி தனியாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.இரண்டு மூன்று நாட்களில் இலைகள் காய்ந்துவிடும்.

பிறகு இவற்றை தனி தனியாக மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு மாற்றி பருக வேண்டும்.தொடர்ந்து 30 தினங்கள் இந்த பானத்தை தினமும் காலை பல் துலக்கிய பிறகு பருகி வந்தால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவிடலாம்.இந்த மூலிகை பானத்தில் சிறிது பட்டை பொடி சேர்த்துக் கொண்டால் கூடிய விரைவில் பலன் கிடைக்கும்.

அதேபோல் வில்வ இலையை பொடித்து அதில் பானம் செய்து பருகி வந்தால் மது பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.