FEVER? புழுங்கல் அரிசியில் இப்படி கஞ்சி செய்து குடித்தால்.. டாக்டர் கிட்ட போகாமலேயே காய்ச்சலை சரி செய்யலாம்!!

Photo of author

By Divya

காய்ச்சல் பாதிப்பு வந்தால் வாய் கசப்பு,உடல் சோர்வு,தலைவலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த காய்ச்சல் நேரத்தில் புழுங்கல் அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் மருத்துவ செலவை தடுத்துவிடலாம்.

காய்ச்சலை குணப்படுத்தும் புழுங்கல் அரிசி கஞ்சி செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)புழுங்கல் அரிசி – ஒரு கப்
2)வெள்ளைப் பூண்டு பற்கள் – பத்து
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கருப்பு மிளகு – ஐந்து
5)பாசி பருப்பு – கால் கப்
6)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கப் அளவிற்கு புழுங்கல் அரிசி மற்றும் கால் கப் அளவிற்கு பாசி பருப்பு எடுத்து கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

பின்னர் குக்கரை எடுத்து ஊறவைத்த அரிசி பாசி பருப்பை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் விசில் நின்றதும் வேகவைத்த அரிசி பருப்பை மத்து கொண்டு கடைய வேண்டும்.பிறகு பத்து வெள்ளைப் பூண்டு பற்கள்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஐந்து மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.இந்த விழுதை புழுங்கல் அரிசி கஞ்சியில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த கஞ்சியை சிறிது ஆறவைத்து உப்பு சேர்த்து பருகினால் காய்ச்சல் குறையும்.அதேபோல் வறுத்த கஞ்சி செய்து பருகினாலும் காய்ச்சல் பாதிப்பு குறையும்.

கால் கப் புழுங்கல் அரிசியை வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அதன் பிறகு அரைத்த அரிசியை கொட்டி குறைவான தீயில் கஞ்சி காய்ச்ச வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு கஞ்சியில் உப்பு சேர்த்து பருகினால் காய்ச்சல் குணமாகும்.