நம் உணவில் அறுசுவை சத்துக்கள் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.குறிப்பாக கசப்பு சுவை நிறைந்த உணவுப் பொருட்கள் அதிக மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளது.இந்த கசப்பு சுவை காய்கறிகளில் முதல் இடம் வகிப்பது பாகற்காய் தான்.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
பாகற்காய் நன்மைகள்:
1)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.
2)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
3)இரத்த சோகை பாதிப்பை தடுக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4)குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவுகிறது.உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வாக திகழ்கிறது.
5)கபம்,பித்தம்,குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது.
6)சுவாசக் கோளாறு பிரச்சனைக்கு அருமருந்தாக இது திகழ்கிறது.கல்லீரல் பாதிப்பை சரி செய்து அதன் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
7)சருமம் சார்ந்த பாதிப்புகளை பாகற்காய் உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம்.சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்கிறது.
இவ்வளவு நன்மைகளை கொண்ட பாகற்காயை சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.
*பாகற்காய் உட்கொண்ட பிறகு பால் பருகக் கூடாது.இது மலச்சிக்கலை உண்டாக்கிவிடும்.
*பாகற்காய் உணவுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிடக் கூடாது.இது உடலில் அமிலத் தன்மையை அதிகரித்துவிடும்.
*பாகற்காயுடன் தயிர் சேர்த்து சாப்பிடக் கூடாது.இது செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
*பாகற்காய் உணவு சாப்பிட்ட பிறகு மாம்பழம் சாப்பிடக் கூடாது.இது குமட்டல்,நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.