ADMK TVK: அதிமுக தவெக கூட்டணி அமைப்பதற்காக பிகே பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகவும் பிரபலம் வாய்ந்த தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து பாஜக உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அண்ணாமலை, அரசியல் கன்சல்டன் மூலம் அறிவுரை பெறுவதுடன் மக்களை களத்துடன் நேரடியாக சந்திப்பது தான் உண்மையான வியூகம் என அறிவுறுத்தி இருந்தார்.
மேற்கொண்டு சீமானும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்று காட்டமாக பேசியுள்ளார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அதிமுகவுடன் தவெக இணைப்பது தான் இவரது முக்கிய வேலை என்றும் அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மறுபுறம் ஒரு கருத்து உள்ளது. ஏனென்றால் இரு கட்சியினரும் எங்கள் தலைமையில் தான் ஆட்சி மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று தங்கள் தரப்பை முன் வைத்துள்ளனர்.
இருப்பினும் ஒருவருக்கு கீழ் ஒருவர் இருப்பது என்பது இன்றியமையாதது. இதனால் இவர்களுக்குடனான கூட்டணி இருக்க முடியாது. அதேபோல சீட் பிரிப்பதிலும் முரண்பாடு இருக்கும் என கூறுகின்றனர். இதனையெல்லாம் மீறி கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தையில் தான் பிரசாந்த் கிஷோர் உள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படி கூட்டணி அமைக்கும் பட்சத்தில் விஜய்க்கு வரும் வாக்கு வங்கி மற்றும் அதிமுக-வில் சிதறிய வாக்கு வங்கி அனைத்தையும் பெறுவதற்கான அடுத்தக் கட்ட திட்டத்தை அமைப்பர்.