இரண்டு மிளகு எடுத்து இப்படி செய்தால்.. படுத்தி எடுக்கும் தலைவலியை விரட்டிடலாம்!!

Photo of author

By Divya

நீங்கள் அடிக்கடி தலைவலி பாதிப்பை சந்திப்பவராக இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றி அதில் இருந்து விடுதலை பெறுங்கள்.

தலைவலிக்கு வீட்டு வைத்தியம்:

தீர்வு 01:

1)வெற்றிலை
2)இஞ்சி
3)மிளகு

இரண்டு வெற்றிலை,ஒரு பீஸ் இஞ்சி மற்றும் நான்கு மிளகை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை அடுப்பில் வைத்து சிறிது சூடுபடுத்தி நெற்றி மீது தடவினால் தலைவலிவிடும்.

தீர்வு 02:

1)கருப்பு மிளகு
2)தேங்காய் எண்ணெய்

நான்கு கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு தாளிப்பு கரண்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடாக்கி நெற்றி பகுதியில் பூசினால் தலைவலி நீங்கும்.

தீர்வு 03:

1)இஞ்சி – ஒரு துண்டு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

இந்த இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும்.

தீர்வு 04:

1)கிராம்பு – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

ஒரு தேக்கரண்டி கிராம்பை கல்வத்தில் போட்டு இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு இடித்த கிராம்பு தூளை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

தீர்வு 05:

1)உருளைக்கிழங்கு – ஒன்று

முதலில் ஒரு சிறிய சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த உருளைக்கிழங்கு பேஸ்டை நெற்றி மீது பூசினால் தலைவலி நீங்கும்.