சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினருக்கும் ஆசனவாய் அரிப்பு பிரச்சனை ஏற்படலாம்.பொதுவெளியில் ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் தர்ம சங்கடமான சூழலை நாம் எதிர்கொள்ள நேரிடும்.எனவே ஆசனவாய் அரிப்பு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
ஆசனவாய் அரிப்பிற்கான காரணங்கள்ல்
1)ஒவ்வாமை
2)மலச்சிக்கல்
3)பைல்ஸ் பாதிப்பு
4)குடற்புழு
5)தோல் பாதிப்பு
6)பாலியல் சார்ந்த காரணங்கள்
7)ஆசனவாய் பிளவு
8)ஈஸ்ட் தொற்று
ஆசனவாய் அரிப்பை போக்கும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை மடல் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஒரு பிரஸ் கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதன் ஜெல்லை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை பேஸ்டை ஆசனவாய் பகுதியில் தடவினால் அரிப்பு ஏற்படுவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
நாட்டு மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை நன்றாக கலக்கி ஆசனவாய் பகுதியில் தடவினால் அரிப்பு,.எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரை வடிகட்டி பருகினால் ஆசனவாய் அரிப்பு,எரிச்சல் குணமாகும்.அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.