BJP TVK: பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் வியூக வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைமையும் வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், அரசியல் கன்சல்டன்டுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கும் போது வியூகம் குறித்து நன்றாக அறிய முடியும். அதுமட்டுமல்ல என்னை போல காவடி எடுங்கள், யாத்திரை கூட செல்லுங்கள். தற்போது மக்கள் தான் அரசியல் வியூகர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்படி இருக்கையில் பிரசாந்த் கிஷோர் பிரதமருக்கு வியூக வகுப்பாளராக அமைந்ததெல்லாம் அண்ணாமலை மறந்துவிட்டாரா என்று ஒரு தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பிரசாந்த் கிஷோரால் பலன் அடைந்த கட்சிகள் ஏராளம். அதில் ஒன்று பாஜகவும் உள்ளது. 2012 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி வெற்றி பெற இவரே காரணமாக அமைந்தார். உங்களது தலைமை தலைவர் ஆரம்ப கட்டத்தில் வெற்றி அடைய அரசியல் வியூக அமைப்பாளர்களை செயல்படுத்துவது தவறல்ல தற்பொழுது வந்த புதிய தலைவர்கள் வியூக அமைப்பாளர்களை சந்திப்பது தான் தவறா? என்று அண்ணாமலைக்கு எதிராக நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முதலில் உங்க கட்சி சார்ந்து என்னென்ன நகர்வுகள் நடந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு பின்பு அடுத்த கட்சிக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.