2 கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளீர்களா!! மகிழ்ச்சியான செய்தி சொன்ன IOC!!

Photo of author

By Gayathri

இந்தியன் ஆயில் நிறுவனமானது இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மேலும் ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தக்கூடிய குடும்பத்தினருக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்வதையும் தற்பொழுது உறுதிப்படுத்தி வருகிறது.

வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படக்கூடிய இரண்டு சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதாகவும் கூட்டுறவு பண்டக சாலையின் கேஸ் ஏஜென்சிகளில் இரண்டு கேஸ் இணைப்புகள் வழங்க மறுக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியன் ஆயில் நிறுவனமானது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறது.

அதன்படி, சென்னையில் இந்த குற்றச்சாட்டு ஆனது அதிக அளவில் எழுந்த நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2 கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இது முதலில் திருவல்லிக்கேணியில் தொடங்கி 88 இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து புகார்கள் இருப்பின், 1800 2333 555 என்ற இலவச அழைப்பிற்கு தெரியப்படுத்தலாம் என்றும் சென்னையில் வசிக்கக்கூடியவர்கள் தங்களுடைய புகார்களை 044 2433 9236 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மேலும் அனைத்து கேஸ் நிறுவனங்களிலும் புகார் பதிவேடு மூலம் நேரில் சென்று தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.