இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய சுப்மன் கில்!!142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

Photo of author

By Gayathri

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது.

ஜோஸ்பாட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி ஆனது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஆக வருகை தந்து ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலில் நடந்த இந்தியா இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டியில் முதல் இரண்டு போட்டியிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

மேலும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 34.2 ஓவர்களுக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இங்கிலாந்து அணியின் உடைய 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியானது அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் கில் 102 பால்களுக்கு 112 ரன்கள் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.