தற்சமயம் வரை அமுலில் இருக்கும் வருமான வரி திட்டமானது 1961 ஆம் ஆண்டு அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. இதை மாற்றியமைக்கும் முனைப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலே ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இனி வரப்போகும் வருமான வரி சட்டதிட்டத்தை அவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து இருந்தார். 1961 ஆம் ஆண்டு இருக்கும் நடைமுறையானது தற்சமயம் பல வகைகளில் தேவையற்ற விதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. நவீன இந்தியாவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இக்காலத்திற்கு தகுந்தார் போல் வருமான வரி சட்டம் 2025 கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது 622 பக்கங்களைக் கொண்டுள்ளது. பழைய சட்டத்தில் 880 பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தியாயங்கள் இரண்டு சட்டங்களிலும் 23 ஆகவே உள்ளது. 1961 சட்டத்தின் படி, 298 சட்டப்பிரிவுகளை கொண்டுள்ளது. இது தற்சமயம் 536 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 அட்டவணைகள் இருந்த நிலையில் இது 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்திற்காக நடப்பாண்டில் இதுவரை வரி செலுத்தப்பட்டு வருகின்றது.
பழைய சட்டத்தின்படி இதுவும் முந்தைய ஆண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு என்று கூறப்பட்ட நிலையில் இது தற்சமயம் வரி ஆண்டு என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டமானது முழுக்க முழுக்க நடப்பில் இருக்கும் மக்கள் எளிமையாக புரிந்து கொள்வதற்காகவும், இன்றைய காலகட்டங்களில் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டும் இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்குதாரர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் அறிவுரைக்குணங்க 6500 பரிந்துரைகளைப் பெற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கங்களின் மீது கொய்யப்படும் வரி பாரத்தை குறைக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டு இன்று மக்களவையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்ற ஆய்வு குழு ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.