எங்கள் தவறை உங்களிடம் விளக்க முடியாது.. கேப்டன் ரோஹித் சர்மா!! இங்கிலாந்து அணியை வென்ற பின் விளக்கம்!!

Photo of author

By Gayathri

கடந்த சில மாதங்களாகவே அவுட் ஆப் ஃபார்மில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பேக் டு ஃபார்ம் கொடுத்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்து ஐந்து டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டியில் இந்தியா அணியானது ரோஹித் சர்மாவின் தலைமையில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஸ் செய்திருப்பது இந்திய அணி கேப்டனின் பெருமையை மீட்டு கொடுத்திருக்கிறது.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற பின் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருப்பதாவது :-

இங்கிலாந்து அணியோடு போட்டியிடும் பொழுது எங்களுக்கு எதிராக பல சவாலான பந்துகள் வீசப்பட்டது என்றும் அந்த பந்துகளில் இருந்து நாங்கள் தோல்வியடையாமல் வெற்றி பெறுவது எங்களுடைய அதிர்ஷ்டம் தான் என்று ரோகித் சர்மா தெரிவித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேன்கள் உடைய விக்கெட்டுகள் தான் தேவை என்றும் அதற்காகத்தான் அவர்கள் பந்துகளை வீசுவார்கள் என்றும் சில சமயம் பந்தானது கேட்ச் அவுட் ஆவதற்கு வாய்ப்பாக அமைகிறது என்றும் ரோகித் சர்மா தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய கேப்டன்சி குறித்து பேசிய ரோஹித் சர்மா அவர்கள், எப்பொழுதும் இந்திய அணியில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு அவர்களுக்கென தனி சுதந்திரங்கள் வழங்கப்படுவதாகவும் எப்பொழுதும் அவர்களுடைய சுதந்திரத்தில் தலைமை பொறுப்பு இருக்கக்கூடிய தான் தலையிடுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். உலகக்கோப்பை போட்டிகளில் கூட இவ்வாறு தான் அவரவருக்கென சுதந்திரங்கள் இருந்தது என்றும் இனி வரக்கூடிய போட்டிகளிலும் விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக விளையாடுவார்கள் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார்.

அவர்களுடைய இஷ்டபடி விளையாடுவது தான் அவர்களை மெருகேற்றிக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது என்றும் அதனால் இது போன்ற விஷயங்களில் தான் தலையிடுவதில்லை என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக ஒரு அணியின் உடைய கேப்டன் எடுக்கக்கூடிய முடிவில் தான் அந்த அணியின் உடைய வெற்றி இருக்கும் என பலரும் எண்ணக்கூடிய நிலையில் ரோஹித் சர்மா தன்னுடைய அணியில் உள்ள விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய இஷ்டப்படி விளையாடுவது தான் வெற்றிக்கு வழிவக்கிறது என தெரிவித்திருப்பது அவருடைய சிந்தனையை எடுத்துரைப்பதாக அமைகிறது.