பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்த படிக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பட்டப்படிப்புகளில் மருத்துவ பிரிவுகளையே அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு டாப் 6 மருத்துவ படிப்புகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
✓ MBBS :-
இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை. பெரும்பான்மையான மாணவர்கள் இந்த படிப்பினையே தங்களுடைய முதன்மை தேர்வாக முடிவு செய்கின்றனர். இந்த படிப்பு மொத்தம் 5.5 ஆண்டு கால அளவை கொண்டது. இதில் ஃப்ரீ கிளினிக்கல், பாரா கிளினிக்கல் மற்றும் கிளினிக்கல் பாடங்கள் அடங்கும்.
✓ BDS :-
இளங்கலை பல் அறுவை சிகிச்சை இந்த படிப்பானது இரண்டாம் நிலை படிப்பாக அதாவது MBBS க்கு அடுத்தபடியான படிப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கான கால அளவு 5 ஆண்டுகள். இதில் தத்துவார்த்த அறிவு மற்றும் நடைமுறை பல்லருவை சிகிச்சை பயிற்சி வழங்கப்படுகிறது. MBBS போன்றே இந்த படிப்பிற்கும் நீட் மதிப்பெண்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
✓ BSMS:-
இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை. இந்த படிப்பு ஆயுஷ் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது இந்தியாவின் ஆயுர்வேதா படிப்புகளின் கீழ் 5.5 ஆண்டுகள் கால அளவில் பயல்விக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய ஆய்வுகள் இந்த படிப்பில் அடங்கும். இந்த பிரிவிற்கும் நீட் மதிப்பெண் ஆனது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
✓ BHMS :-
இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இந்த படிப்பானதும் ஆயுஷ் பாடத்திட்டத்தின் கீழ் வருகிறது. இந்தப் பட்டப்படிப்பை படிப்பதற்கு மாணவர்கள் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்களும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களும் பெற்றெடுத்தல் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
✓ BPT :-
இளங்கலை பிசியோதெரபி இந்த படிப்பானது ஆறு மாத இன்டர்ன்ஷிப்பை உள்ளடக்கி மொத்தம் 4.5 ஆண்டு படிப்பாக பயில்விக்கப்படுகிறது. நீட் தேர்வு மூலம் இளங்கலை பிசியோதெரபிஸ்ட் படிக்க நினைக்கும் மாணவர்கள் இந்த படிப்பிற்கு பின் பிசியோதெரபிஸ் ஆக பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.