எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்.. வெடிக்கும் உட்கட்சி மோதல்!! அடுத்த ADMK தலைமை செங்கோட்டையன் தான்!!

0
2
Poster against Edappadi.. Explosive internal conflict!! The next ADMK chief is Sengottaiyan!!
Poster against Edappadi.. Explosive internal conflict!! The next ADMK chief is Sengottaiyan!!

ADMK: அதிமுக உட்கட்சி பூசலானது நாள்தோறும் அதிகரித்து வண்ணமாகவே உள்ளது. இதற்கு முன்னதாக ஐ டிவிங் நிர்வாகி தவெக வில் இணைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக விவசாய சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுவிழா நடத்தினர்.

இந்த பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி மூத்த தலைவரான செங்கோட்டையன் அவர்களின் பெயரும் எஸ் பி வேலுமணி கீழ் தான் இருந்துள்ளது. இதனின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்தார். மூத்த மாஜி அமைச்சர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல விமர்சனங்களை முன் வைத்தனர்.

இப்படி இருக்கையில் இரட்டை இலை மற்றும் உட்கட்சி சார்ந்த பிரச்சனைகளில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இவை அனைத்தும் எடப்பாடிக்கு அடி மேல அடி விழுந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் எடப்பாடி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல், தற்பொழுது ஒருங்கிணைந்த அதிமுக கட்டாயம் தேவை என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.

அதன் வெளிப்பாடாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் மூலம் எடப்பாடி மீதுள்ள எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை போடாதது குறித்து செங்கோட்டையன் எதிர்த்து கேள்வி கேட்டதற்காக உரிமை குரலை வெளிப்படுத்திய கொங்கு நாட்டு சிங்கம், ஜாதிப்பாரா நீதிமான் என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரால் மீண்டும் கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

Previous articleடாப் 6 மருத்துவ படிப்புகள்!! 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!!
Next articleதிமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக இணைந்தால் மட்டுமே முடியும்!! India today சர்வேயின் புள்ளிவிவரங்கள்!!