India Today C voters நடத்திய கணக்கெடுப்பில் லோக்சபா தேர்தல் தற்பொழுது நடைபெற்றால் அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்பதை வெளியிட்டிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி அதிமுக மற்றும் பாஜக மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழகத்தில் திமுக ஆட்சியை வெல்ல முடியும் என தெரிவித்திருக்கிறது.
அதாவது தற்பொழுது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் வலிமை பெற்றிருக்கிறது என்றும் இதனை வெல்ல வேண்டும் என்றால் அதிமுக மற்றும் பாஜகவின் உடைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்பொழுது அதிமுக 20 சதவிகித வாக்குப்பதிவினையும் பாஜக 21 சதவிகித வாக்குப்பதிவியையும் பெற்றிருப்பதாகவும் திமுக அரசு 51% வாக்குப்பதிவினை பெற்றிருப்பதாகவும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலுள்ள கணக்குப்படி பார்ப்பின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்தால் 41% வாக்குப்பதிவு கிடைக்கும் என்றும் இவ்வாறு மெகா கூட்டணி அமையும் பட்சத்தில் 51% ஆக இருக்கக்கூடிய திமுக அரசின் வாக்குப்பதிவானது சரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திமுகவிற்கு எதிரான கூட்டணி என்பது அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா மற்றும் இதர சிறிய கட்சிகள் என கருத்துக்கணிப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கூட்டணி அமையும் பட்சத்தில் திமுகவை அனைத்து தொகுதிகளிலும் வென்று விட முடியும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டதன் படி தற்பொழுது பாஜகவானது அதிமுகவில் எந்த வித பிழவும் இல்லாமல் சரி செய்ய வேண்டும் என போராடி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.