அரசு பேருந்துகளில் பெண் நடத்துனவர்களுக்கான தகுதிகளில் புதிய மாற்றம்!! அரசாணை வெளியீடு!!

Photo of author

By Gayathri

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் நியமிக்கப்படும் பெண் நடத்துனர்களுக்கான உயரம் மற்றும் இடையில் புதிய திருத்தங்களை பெண் நடத்துனர்களுக்கான உயரம் மற்றும் இடையில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையின்படி பெண் நடத்துனரின் குறைந்தபட்ச உயரம் 150 சென்டிமீட்டர் என்றும் உடல் எடையானது குறைந்தபட்சம் 45 கிலோ இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவதற்கு அவர்களுடைய தகுதிகளாக உயரம் 160 சென்டிமீட்டர் இருத்தல் வேண்டும் என்று ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை குறைத்து 150 cm உயரம் இருந்தாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உடல் எடையும் 45 கிலோ இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நடத்துனர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசாணையின் முக்கிய குறிக்கோளானது போக்குவரத்து துறையில் அதிக அளவு பெண் நடத்துனர்களை கொண்டு வர வேண்டும் என்பதும் பணியில் இருக்கும் பொழுது இறந்தவர்களுடைய பெண் வாரிசுகளுக்கு இந்த நடத்துனர் பணியானது கிடைத்திட வேண்டும் என்பதும் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.