உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.அதிக விலை உள்ள பழங்களைவிட நம் ஊர் பழங்களில் தான் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களின் நிறம் மற்றும் தோற்றம் கவரும் வகையில் இருப்பதால் அதை தான் மக்கள் வாங்க விருப்பப்படுகின்றனர்.ஆனால் லோக்கல் மார்க்கெட்டில் கிடைக்கும் கொய்யா,சீத்தா,சப்போட்டா,பப்பாளி போன்ற பழங்கள் விலை குறைவாக இருந்தாலும் அதை மக்கள் மலிவாகவே பார்க்கின்றனர்.சொல்லப்போனால் விலை குறைவான பழங்களில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீத்தா பழத்தை ஒருமுறையாவது நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள்.சீத்தா பழத்தில் கால்சியம்,இரும்பு,பொட்டாசியம்,நியாசின்,வைட்டமின் சி,ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.
சீத்தா பழத்தை இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.சீத்தா பழத்தில் உள்ள குளுக்கோஸ் உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகிறது.சீத்தா பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு அபாயத்தில் இருந்து.
சீதை பழத்தில் காணப்படும் வைட்டமின் பி சத்து மூச்சுக்குழாய் சார்ந்த பாதிப்புகளை சரி செய்கிறது.ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சீத்தா பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கண் பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் சீத்தா பழம் சாப்பிட்டால் சரியாகும்.உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் சீத்தா பழத்தை உட்கொள்ளலாம்.சீத்தா பழத்தை ஜூஸாக பருகி வந்தால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.தொடர்ந்து சீத்தா பழம் சாப்பிட்டு வந்தால் உடல் நரம்புகள் பலப்படும்.
இதில் முள் சீத்தா பழம் கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாக திகழ்கிறது.ஆனால் சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்பு சமயத்தில் சீத்தா பழம் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.