குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பொங்குதல் பிரச்சனை ஏற்படுகிறது.உடலில் அதிக சூடு இருந்தால் கண் எரிச்சல்,கண் பொங்குதல் போன்றவை நிகழும்.கண்களில் அழுக்கு சேரும் பொழுது அவை பூளை அழுக்காக வெளியேறுவது இயல்பான ஒரு விஷயம் தான்.
ஆனால் அளவிற்கு அதிகமான கண் பொங்கும் போது அசால்ட்டாக கருதாமல் அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.கண் பொங்குதல் பிரச்சனை பெரும்பாலும் கோடை காலத்தில் தான் நிகழும்.உங்கள் குழந்தைக்கு கண் பொங்குதல் பிரச்சனை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்.பெரியவர்களும் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)ஆமணக்கு இலை – ஒன்று
3)மண் விளக்கு – ஒன்று
4)திரி – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு சுத்தமான கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு காட்டன் பஞ்சை ஒவ்வொரு கிண்ணத்திலும் போட்டுக் கொள்ளவும்.
குழந்தையின் இரண்டு கண்களையும் துடைக்க இந்த கிண்ணத்தில் உள்ள நீரை பயன்படுத்த வேண்டும்.ஒரு கிண்ணத்தில் உள்ள நீரை ஒரு கண்ணிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதேபோல் ஒரு கண்ணை துடைத்த பஞ்சை மற்றொரு கண்ணிற்கு பயன்படுத்தக் கூடாது.இப்படி செய்தால் கண் பொங்குவது கட்டுப்படும்.
அதன் பிறகு ஒரு மண் விளக்கு எடுத்து திரி போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு விளக்கெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு ஆமணக்கு இலையை நன்றாக துடைத்துவிட்டு அதன் அடி பகுதியில் விளக்கெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.அடுத்து இந்த இலையை விளக்கு தீயில் சிறிது வாட்டி எடுக்க வேண்டும்.
பிறகு இந்த இலை வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் குழந்தையின் வயிற்று பகுதியில் வைக்க வேண்டும்.இதனால் உடல் சூடு குறைந்து கண் பொங்குதல் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.
உடல் சூடு அதிகமாக இருந்தால் வயிற்று தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்தால் சூடு தணியும்.வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் போட்டால் உடல் சூடு தணியும்.இரவு நேரத்தில் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் வைத்தால் கண் சூடு,கண் எரிச்சல் பாதிப்பு குணமாகும்.