இளம் தம்பதியினர் இடையே குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.உணவுமுறை மாற்றம்,வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு மலட்டு தன்மை அதிகரித்து வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க நிச்சயம் சில உணவுகளை தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விந்தணு தரம் மற்றும் வீரியம் அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிடலாம்?
1)ஒமேகா 3 கொழுப்பு அமில உணவு
மத்தி,கெளுத்தி,சால்மன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் விந்தணு தரம் அதிகரிக்கும்.
2)உலர் விதைகள்
முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு,ஆளிவிதை,பிஸ்தா,அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை சாப்பிட்டு வந்தால் இயற்கையான முறையில் விந்தணு தரம் உயரும்.
3)பூசணி விதை
துத்தநாகம் நிறைந்த பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
4)முழு தானிய உணவுகள்
மாப்பிளை சம்பா.கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து பருகி வந்தால் விந்தணு தரம் அதிகரிக்கும்.
5)ஸ்ட்ராபெர்ரி
விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடலாம்.அதேபோல் தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
6)வெண்ணெய் பழம்
பாலில் அவகேடோ பழத்தை போட்டு அரைத்து பருகி வந்தால் விந்தணு தரம் மேம்படும்.
7)கீரைகள்
முருங்கை கீரை,பீட்ரூட்,முள்ளங்கி போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டால் விந்தணு தரம் மேம்படும்.
8)தக்காளி
விந்தணு டிஎன்ஏ சேதம் ஏற்படுவது தடுக்க தக்காளி பழத்தில் ஜூஸ் செய்து பருகி வரலாம்.
9)முருங்கை பருப்பு
ஆண்களின் விந்து தரம் அதிகரிக்க முருங்கை பருப்பை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.
10)பாதாம் பிசின்
விந்தணு தரம் மேம்பட விந்தணு உற்பத்தி அதிகரிக்க பாதாம் பிசின்,முருங்கை பிசினை பொடித்து பாலில் கலந்து பருகலாம்.