அதிமுக தேமுதிக பாமக.. இது மட்டும் நடந்தால் திமுக மொத்தமும் க்ளோஸ்!! வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

Photo of author

By Rupa

Parliamentary Elections: நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் நடக்கும் பட்சத்தில் யார் ஆட்சி அமைப்பார் என்பது குறித்து தனியார் ஊடகம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

பிரபல தனியார் செய்தி ஊடகமானது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் யார் ஆட்சியைப் பிடிப்பார்? தமிழகத்தில் அரசியல் களம் எப்படி இருக்கும்? என்பது குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்சமயம் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் அதாவது முன்பை காட்டிலும் நான்கு சதவீதம் வாக்கு வித்தியாசமானது அதிகரித்து முன்னேறும். அதேபோல அதிமுக 3 சதவீதம் குறைந்து 20% வாக்குகளை மட்டுமே பெரும் என்று தெரிவித்துள்ளனர்.

இதில் பாஜக முன்பை விட நான்கு சதவீதம் வாக்கு வங்கியை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் திமுகவை வீழ்த்த ஒரே வழி அனைத்து மாற்றுக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுதான் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அதிமுக, பாமக, தேமுதிக மேலும் சில மாற்று கட்சியினர் இணையும் பொழுது திமுக-வால் முன்னேற முடியாது என்று இந்த கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரும் பட்சத்தில் பாஜகவே வர அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவே அதிமுக பாஜக தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி வைத்துக் கொண்டாலும் வெற்றி பெறுவது சற்று கடினம் தான் என தெரிவித்துள்ளனர். கூட்டணி வைக்கும் பட்சத்தில் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். ஆனால் தனித்து நிற்கையில் அதைக் கூட பெறாமல் அதிமுக டெபாசிட் இழக்கக்கூடும் என்று கூறியுள்ளனர்.