விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நெல் அறுவடைக்கு உதவ தயாரான அரசு!!

Photo of author

By Gayathri

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நெல் அறுவடைக்கு உதவ தயாரான அரசு!!

Gayathri

Good news for farmers!! Govt ready to help rice harvest!!

தமிழகத்தில் நெல் பயிர்கள் விளைச்சல் ஆனது 2024 ஆம் ஆண்டு விட கூடுதலாக இருப்பதால் நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் கட்டும் இயந்திரங்களுக்கு அதிக அளவு கட்டுப்பாடு நிகழ்வதற்கான சூழல்கள் ஏற்பட்டு இருப்பதால் இதனை கலைவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றினை மேற்கொண்டு இருக்கிறது.

திட்டத்தின் படி, விவசாயிகள் உழவர் செயலியை பயன்படுத்தி தங்களுடைய நெல் அறுவடையின் பொழுது 51 அறுவடை இயந்திரங்களையும் 51 நெல் கட்டும் இயந்திரங்களையும் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

உழவர் செயலின் மூலம் இயந்திரங்களை பெறுவதற்கான வழிமுறை :-

✓ உழவர் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

✓ உழவர் செயலியை லாக் இன் செய்ய விவசாயின் உடைய சுய விவரங்களை உள்ளிட வேண்டும்.

✓ வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற தேர்வினை கிளிக் செய்ய வேண்டும்.

✓ அறுவடை இயந்திரங்கள்/ combine harvester என்ற தேர்வினை கிளிக் செய்ய வேண்டும்.

✓ search / தேடுக என்ற இடத்தில் விவசாயி என்னுடைய மாவட்டம் மற்றும் வட்டாரத்தை குறிப்பிட வேண்டும்.

✓ இவ்வாறு தேடி கிடைக்கும் இயந்திரத்தினுடைய உரிமையாளர் பெயர் மற்றும் செல்போன் எண்களை வைத்து அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

குறிப்பு :-

இது குறித்த மேலும் தகவல்களை பெற வேளாண்மை பொறியியல் துறையின் https://aed.tn.gov.in/ta/harvester// என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தலைமை பொறியாளர் அலுவலக 8838224538 எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.