நம் காதுகளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒரு விஷயம் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காதுகளில் அழுக்கு படிகிறது.காதுகளில் படியும் மெழுகு பசை போன்ற அழுக்குகளை நீக்க பட்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும்.
பட்ஸ் கொண்டு காது அழுக்கை நீக்குவதால் காது ஜவ்வு சேதமடைய வாய்ப்பிருக்கிறது.காது துவரத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற முடியாமல் மீண்டும் உள்ளே புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது.எனவே காதுகளில் உள்ள அழுக்கை நீக்க பட்ஸ்,சேஃப்டி பின் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதில் நம் பாரம்பரிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றி காது அழுகை அப்புறப்படுத்துங்கள்.
காதுகளில் அழுக்கு சேர்ந்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:-
1)காது வலி
2)காது குடைச்சல்
3)காதில் ஒருவித ஒலி உணர்வு
4)காதில் துர்நாற்றம் வீசுதல்
5)காது அடைப்பு
காது அழுக்கை போக்கும் ஹோம் ரெமிடி:
தீர்வு 01:
உப்பு மற்றும் தண்ணீர்
ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கரைக்க வேண்டும்.
பிறகு ஒரு காட்டன் பஞ்சு எடுத்து உப்பு நீரில் ஊறவைத்து காது துவாரத்தில் பிழிந்துவிட வேண்டும்.இப்படி செய்தால் காதில் உள்ள அழுக்கு வெளியேறிவிடும்.
தீர்வு 02:
பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய்
முதலில் ஒரு பல் வெள்ளைப் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்த வெள்ளைப் பூண்டு பல்லை அதில் போட்டு சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.
இந்த எண்ணெயை ஆறவைத்து வடித்து காது துவாரத்தில் விட்டால் அழுக்குகள் முழுமையாக வெளியேறிவிடும்.தேங்காய் எண்ணெய்க்கு பதில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
தீர்வு 03:
வெள்ளை வினிகர் மற்றும் ரப்பிங் ஆல்கஹால்
ஒரு கிண்ணத்தில் சிறிது வெள்ளை வினிகர் மற்றும் ரப்பிங் ஆல்கஹால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் போட்டு ஊறவைத்து காது துவாரத்தில் விட்டால் மெழுகு அழுக்கு உடனடியாக வெளியேறிவிடும்.