சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

Photo of author

By Divya

சுகர் லெவலை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அருமையான ஹோம் ரெமிடி!! காலை மாலை ஒருவேளை பருகுங்கள்!!

Divya

சர்க்கரை நோய்: உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை நோய் என்கின்றோம்.இந்த இரத்த சர்க்கரை அளவை எப்பொழுது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

1)அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2)கண் பார்வை மங்குதல்
3)உடல் எடை குறைவு
4)உடல் சோர்வு
5)காயங்கள் குணமாக தாமதமாதல்

சர்க்கரை நோய் கட்டுப்பட வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒன்றரை தேக்கரண்டி
2)தண்ணீர் – இரண்டு கிளாஸ்
3)கிராம்பு – ஒரு தேக்கரண்டி
4)இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
5)ஏலக்காய் – ஒன்று
6)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
7)துளசி இலை – 20

பயன்படுத்தும் முறை:-

படி 01:

அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடானதும் ஒன்றரை தேக்கரண்டி வெந்தயத்தை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

படி 02:

பிறகு ஒரு துண்டு இலவங்கப்பட்டையை எடுத்து உரலில் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இலவங்கப்பட்டை தூளை கொதிக்கும் வெந்தய நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

அடுத்து பத்து எண்ணிக்கையில் கிரேம்பு எடுத்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு ஏலக்காயை இடித்து போட்டுக் கொள்ள வேண்டும்.

படி 04:

இதன் பிறகு சிறிதளவு துளசி இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்து கொதிக்கும் பானத்தில் சேர்க்க வேண்டும்.இறுதியாக கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடவும்.

பின்னர் இந்த பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

அதேபோல் தினமும் காலை,மாலை ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை பானத்தை பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.அதேபோல் வெறும் வெந்தய பானத்தை காலை நேரத்தில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

நாவல் பழ விதையை காயவைத்து பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் இரத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.டீ,காபிக்கு பதில் க்ரீன் டீ செய்து பருகி வந்தால் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் கட்டுப்படும்.