Jaundice: ஒரே நாளில் கொடிய மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. இந்த வீட்டு வைத்தியம் தெரியுமா?

Photo of author

By Divya

Jaundice: ஒரே நாளில் கொடிய மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. இந்த வீட்டு வைத்தியம் தெரியுமா?

Divya

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-

*தோல் நிறத்தில் மாற்றம்
*கண் வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் மாறுதல்
*வாய் மற்றும் ஈறுகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
*சளி அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்
*மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வருதல்

மஞ்சள் காமாலைக்கான காரணங்கள்:-

*கல்லீரல் பாதிப்பு
*கல்லீரல் புற்றுநோய்
*கணைய புற்றுநோய்
*மருந்து பக்கவிளைவு

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:-

தீர்வு 01:

ஐம்பது கிராம் அளவு மூக்கிரட்டை கீரை,நான்கு மிளகை அரைத்து நூறு மில்லி விளக்கெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து 15 மில்லி அளவு பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தீர்வு 02:

கீழாநெல்லி செடி ஒன்றை எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை பசும் பால் அல்லது தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தீர்வு 03:

மூக்கிரட்டை கீரை,கீழாநெல்லி இலை மற்றும் அருகம்புல் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நான்கு மிளகை இடித்து போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் மஞ்சள் காமாலை ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.

தீர்வு 04:

வில்வ இலை பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தீர்வு 05:

மருதம்பட்டை பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி தலா கால் தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தீர்வு 06:

நன்னாரி வேர் பொடியை 100 மில்லி தண்ணீர் கலந்து காய்ச்சி பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தீர்வு 07:

ஆமணக்கு இலை மற்றும் கீழாநெல்லி இலையை விழுது பக்குவத்திற்கு அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.