ஞானப்பல் வலி? இந்த பொருளை பல்லில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி வீக்கம் குறைந்துவிடும்!!

Photo of author

By Divya

ஞானப்பல் வலி? இந்த பொருளை பல்லில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி வீக்கம் குறைந்துவிடும்!!

Divya

அனைவருக்கும் 17 முதல் 25 வயதிற்குள் ஞானப்பல் முளைக்கிறது.இது கடைசி கடவாய் பல் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஞானப்பல் வலி முளைத்தால் அதிக வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.இந்த ஞானப்பல் வலியை சரி செய்ய சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:

உப்பு நீர்

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸில் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வாய் கொப்பளித்தால் ஞானப் பல் வலி குணமாகும்.தினமும் ஒரு கிளாஸ் உப்பு நீரை வாயில் ஊற்றி கொப்பளித்தால் சொத்தைப்பல் வலி குணமாகும்.

தீர்வு 02:

கிராம்பு பானம்

முதலில் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இடித்த கிராம்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் ஞானப்பல் வலி குணமாகும்.

தீர்வு 03:

பூண்டு மற்றும் உப்பு

இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இதை ஞானப்பல் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி நீங்கிவிடும்.

தீர்வு 04:

மிளகு கீரை எண்ணெய்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கால் தேக்கரண்டி மிளகு கீரை எண்ணெய் சேர்த்து வாய் கொப்பளித்தால் ஞானப்பல் வலி குணமாகும்.

தீர்வு 05:

கிராம்பு எண்ணெய்

ஒரு காட்டன் பஞ்சு எடுத்து கிராம்பு எண்ணெய் சேர்த்து பல் வலி மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி,வீக்கம் குறைந்துவிடும்.

தீர்வு 06:

ஐஸ்கட்டி ஒத்தடம்

ஞானப்பல் மீது ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி,வீக்கம் முற்றிலும் குணமாகிவிடும்.

தீர்வு 07:

கிராம்பு மற்றும் பட்டை

கல்வத்தில் இரண்டு கிராம்பு அதாவது இலவங்கம் மற்றும் ஒரு துண்டு பட்டை போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.பிறகு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் இடித்த கிராம்பு,பட்டை பொடியை போட்டு கலந்து வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.