நமது சருமத்தில் அரிப்பு,செதில் போன்ற தடிப்புகள் திட்டுகள் ஏற்பட்டால் அவை சொரியாசிஸ் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக் கூடும்.
சொரியாசிஸ் அறிகுறிகள்:-
*தோல் சிவந்து போதல்
*தோலில் சிவந்த செதில் திட்டுகள் தென்படுதல்
*தோல் தடிப்பு
*தோல் வெடிப்பு
*தோல் வீக்கம்
*மூட்டு வீங்குதல்
சொரியாசிஸ் வர காரணங்கள்:-
*நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயல்படுதல்
*பரம்பரைத் தன்மை
தேவையான பொருட்கள்:-
1)வெப்பாலை – 10 இலைகள்
2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
3)தேன் மெழுகு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் பத்து வெப்பாலை இலையை பறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து 100 அல்லது 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு நறுக்கி வைத்துள்ள வெப்பாலை இலையை அதில் போட்டு ஸ்பூன் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.
ஸ்டெப் 04:
இந்த கிண்ணத்தை வெயிலில் வைக்க வேண்டும்.காலை 9மணிக்கு வைத்து மாலை 5 மணிக்கு எடுத்துவிட வேண்டும்.இப்படி ஒருவாரம் அதாவது 7 நாட்கள் வரை வைக்க வேண்டும்.இந்த நாட்களில் ஒவ்வொரு தினமும் பழைய வெப்பாலை இலையை எடுத்துவிட்டு புதிய இலையை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
ஏழு தினங்களுக்கு பிறகு வெப்பாலை இலையை அகற்றிவிட்டு எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.சொரியாசிஸ் மீது இந்த எண்ணெயை அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரமாக குணமாகிவிடும்.
இதை எண்ணெய் வடிவில் அதாவது திரவ வடிவில் அல்லாமல் கெட்டியாக பயன்படுத்த விரும்பினால் அதற்கு தேன் மெழுகு பயன்படுத்தலாம்.இதற்கு முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் சிறிதளவு தேன் மெழுகு சேர்த்து உருக வைக்க வேண்டும்.பிறகு இதை வெப்பாலை எண்ணையில் ஊற்றி நன்றாக கலந்துவிட்டால் சிறு நேரத்தில் கெட்டியாகிவிடும்.பின்னர் இதை சொரியாசிஸ் பாதித்த இடத்தில் அப்ளை செய்து பயனடையலாம்.